கவர்னர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை: மேற்குவங்க கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக அவரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததையடுத்து, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அம்மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, 'கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார்' என, ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 07) கவர்னர் ரவியை மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது கவர்னர் ரவிக்கு சால்வை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பவியேற்ற சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
Advertisement
Advertisement