கத்தாரில் தவிக்கும் இந்தியர்கள்; தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தோஹா; கத்தாரில் வசிக்காத ஆனால் போரின் காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் விவரங்களை இந்திய தூதகரம் சேகரிக்கும் பணிகளை தொடங்கி உள்ளது.
இது குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்;
பிப்.28ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை கத்தாரில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள், குறுகிய கால விசாவுடன் வந்துள்ளவர்கள், கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அதற்கான இணைப்பில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
கத்தாரில் வசிக்காத அதே நேரத்தில் இங்கு சிக்கித் தவிக்கும் நபர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் விவரஙகளை கண்டறியும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த அறிவிப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்கனவே தரப்பட்டு உள்ள இணைப்பு இனி செயல்படாது. எனவே forms.gle/A5mqrqjeigBuTUrj9 என்ற இணைப்பை இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி