வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்கும் நீதிபதிகளை எப்படி கேள்வி கேட்கலாம்?
- டில்லி சிறப்பு நிருபர் -
'வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகளை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களின் நம்பகத்தன்மையை எப்படி சந்தேகிக்கலாம்? நீதிபதிகளை கேள்வி கேட்கும் துணிச்சலை யார் கொடுத்தது?' என, மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தரப்பிலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு, இந்த மனுக்களை விசாரித்து அவ்வப்போது இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த நீதித்துறை அலுவலர்களை சந்தேகித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகளை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களின் நம்பகத்தன்மையை எப்படி சந்தேகிக்கலாம்? நீதிபதிகளை கேள்வி கேட்கும் துணிச்சலை யார் கொடுத்தது? இப்படியான மனுக்களை உச்ச நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது. சகித்துக் கொள்ளவும் முடியாது.
கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சமர்ப்பித்த அறிக்கையின்படி, கடந்த 9ம் தேதி மாலை வரை, 10.16 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்தப் பணி விரைவாக நடக்க தேர்தல் கமிஷன் மேற்கொண்டு, கட்டாய விதிகள் எதையும் அறிமுகப்படுத்தக் கூடாது. ஒருவேளை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற வேண்டும்.
நீதித்துறை அலுவலர்களால் நிராகரிக்கப்படும் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, கொல்கட்டா உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட தனி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அமைத்துக் கொள்ளலாம்.
நீதித்துறை அலுவலர்கள் எடுக்கும் முடிவுகளில், தேர்தல் கமிஷனின் எந்தவொரு நிர்வாக அதிகாரியும் தலையிட அனுமதி இல்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
@block_B@
மேற்கு வங்கத்தில் தகுதி வாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படவில்லை என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் கமிஷனின் குறிக்கோள். தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நிச்சயம் ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு தரப்படும். அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. 2002 வாக்காளர் பட்டியலுடன் பொருந்தாதவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.block_B
Stop Elections Until NRC is fully Done to Remove Billions of ModiMentalAadhar Regularised Foreign Infiltrators esp from Neighbour Countries. Governance-Justice have become Useless, Vestedly Biased& Costly-UnAffordable to Common PeopleAbolish them & Employ on ContractMinmWages Just for 01year
அம்மையார் மேற்கு வங்காளம் இந்தியாவின் ஓர் மாநிலம் என்ற எண்ணத்தில் இல்லை போல? அம் மாநிலம் ஏதோ பங்களாதேஷின் ஒரு மாநிலம் என்ற நினைப்பு போல?
இந்த அடாவடி மம்தா என்கிற முரட்டு பூனைக்கு வருகிற தேர்தலில் பாஜக மணியை கட்டிவிடும்.
நீதிமன்றம் இதற்க்கு வாய்தா போடாது. நேரடியாக ஆதாரங்களை காட்டினால் ஓட்டுரிமை மறுபடியும் கிடைக்கும். ஒருவரை குடிமகன் என்று உறுதி செய்யவேண்டிய பொறுப்பு நீதிமன்றத்துக்கு இருக்கிறது. ஆவணங்கள் எதுவும் இல்லாமல் நாள் இந்தியன் என்று யாரும் சொல்ல முடியாது.
Yes, judges are the son of God, they know a to z !?
எ டு இசட் தெரிந்தவர்கள்தான் நீதியரசராக இருக்கவேண்டியதில்லை. சட்டத்தை நன்றாக படித்து அறிந்து தெரிந்து கொண்டு அதன் நடைமுறையை புரிந்து கொண்டு, அது செயல்படாதபோதும் அல்லது மீறப்படும்போதும், செயல்படத்தெரிந்தவர்கள் நீதிபதிகள். நூற்றுக்கு நூறு என்பது எங்கும் எதிலும் எப்போதும் இல்லை. அதுசரி நீங்கள் கடவுளின் மகன் என்று நீங்கள் போற்றுபவரை ஏன் வீதிக்கு இழுக்கிறீர்கள்? சும்மாவே கரித்து கொட்டுகிறார்கள்.