சி.ஐ.ஐ., மகளிர் பிரிவு தலைவர் அமுதவல்லி ரங்கநாதன்
சென்னை: சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் அங்கமான 'இந்திய பெண்கள் நெட்வொர்க்'கின் தமிழக தலைவராக அமுதவல்லி ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓராண்டு இப்பதவியில் அவர் செயல்படுவார். சென்னையில் அவ்வமைப்பு நடத்திய 'தாரகை 2026' மாநாட்டில் அவர் பொறுப்பேற்று கொண்டார்.
தொழில்துறையில் பெண்களின் தலைமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இம்மாநாட்டில் தொழில் துறை, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட உயர்பொறுப்பு வகிக்கும் மகளிர் கலந்து கொண்டனர்.
பணியிடங்களில் ஆண்களின் ஆதரவு, பெண்களுக்கான சம வாய்ப்பு ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement