'வேளாண் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயரும்'
புதுடில்லி;வேளாண் மற்றும் உணவு பொருட்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என மத்திய வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச உணவு மற்றும் விருந்தினர் உபசரிப்பு தொழில் கண்காட்சியில் அவர் கூறியதாவது:
நாட்டின் வேளாண் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதி அளவில் வளர்ந்து வருகிறது. இதில், நம் நாடு 7வது இடத்தில் இருக்கிறது. வேளாண் பொருட்கள் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய், அதாவது ஆண்டுக்கு 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்றுமதியாகின்றன.
வரும் நாட்களில் முதல் இடத்தை நோக்கி நம்நாடு செல்லும். 9 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உலக நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளதே இதற்கு காரணம். இதன் வாயிலாக, 38 நாடுகளுக்கு வரியில்லாமல் பொருட்களை அனுப்பலாம். z
கடந்த 2014 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கிடையில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி 4 மடங்கு அதிகரித்துள்ளது. பருப்புகளின் ஏற்றுமதி மூன்று மடங்கும், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் 4 மடங்கும், பழங்களின் ஏற்றுமதி இரண்டு மடங்கும் அதிகரித்துள்ளது. அரிசி ஏற்றுமதி அதிகபட்சமாக, 62 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண், உணவுபொருட்கள் ஏற்றுமதி 7வது இடம்
வேளாண் ஏற்றுமதி மதிப்பு ரூ.5 லட்சம் கோடி (ஆண்டுக்கு)*
வரியற்ற நாடுகளின் எண்ணிக்கை 38
ஏற்றுமதி வளர்ச்சி
(2014 - 2025)
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
4 மடங்கு
பருப்பு வகைகள்
3 மடங்கு
பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் 4 மடங்கு
பழங்கள்
2 மடங்கு
அரிசி
62 %