இதே நாளில் அன்று
மயிலாடுதுறை மாவட்டம், திருவாளப்புத்துாரில், பிரபல நாட்டிய பெண்மணியான கல்யாணி அம்மாளுக்கு மகனாக பிறந்தவர், திருவாளப்புத்துார் சுவாமிநாத பிள்ளை எனும் டி.கே.சுவாமிநாத பிள்ளை.
இவர், பந்தநல்லுார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம், 12 ஆண்டுகள் குருகுல வாசமாக பரதநாட்டியம் கற்றார். 'சிம்ம நந்தனம்' எனும் சிறப்பு கலையையும் கற்ற இவர், தன் குருவுடன் இணைந்து, பல ஊர்களில் நடந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின், சென்னை சென்ற இவர், அங்கு, வழுவூர் ராமையா பிள்ளையுடன் இணைந்து, பல ஊர்களில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், பல மாணவர்களுக்கு நடன கலையை கற்பித்தார். இவரது மாணவர்களான வழுவூர் சாம்ராஜன், எல்.விஜயலட்சுமி, ஹேமமாலினி, ஸ்ரீபிரியா, நிர்மலா விஸ்வநாதன் உள்ளிட்டோர் நடனம் மற்றும் நடிப்பில் பிரபலமாகினர்.
'கலைமாமணி, பரதகலா கேசரி' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், 1972ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
இதே நாளில் அன்று
----------------
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை