ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில், 'மின்ட் லெமனேட்' ஜூஸ் வாங்கியதற்கான பில்லில், எரிவாயுவுக்கும் ஐந்து சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தப் பில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேற்காசிய போர் பதற்றம் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.
வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. சில ஹோட்டல்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், பெங்களூரு கொத்தனுாரில் கே.நாராயணபுரா பிரதான சாலையில் உள்ள, 'தியோ கபே' என்ற ஹோட்டலில் கொடுத்த பில்லை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
பக்சிபக் ராஜா பாபு என்ற அந்த நபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட ஹோட்டல் பில்லை, எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த பில்லில் ஒரு, 'மின்ட் லெமனேட்' ஜூஸ் 179 ரூபாய் வீதம் இரண்டுக்கு 358 ரூபாய். மத்திய ஜி.எஸ்.டி., 2.5 சதவீதம்; மாநில ஜி.எஸ்.டி., 2.5 சதவீதத்துடன், 'காஸ் கிரைசிஸ் சார்ஜ்' 5 சதவீதம் என குறிப்பட்டு, மொத்தம், 374 ரூபாய் கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வேடிக்கை என்னவென்றால், 'மின்ட் லெமனேட்' செய்ய அடுப்பே தேவையில்லை. 'ஜூசுக்கு' எதற்கு, 'காஸ் கிரைசிஸ் சார்ஜ்' கட்டணம் வசூலிக்கின்றனர் என்று தெரியவில்லை.
ஹோட்டலின் செயலுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளிக்க வேண்டும். எரிவாயு அடுப்பில் யார், 'மின்ட் லெமனேட்' தயாரிக்கின்றனர்? நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் கீழ், கட்டணம் வசூலித்தது சட்ட விரோதம். எரிபொருள் பற்றாக்குறைக்கு கூடுதல் கட்டணம் சேர்ப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை. அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி முறிவு? புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சிக்கல்
-
ஆப்கன் மருத்துவமனை மீது பாக் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு
-
ஒடிஷா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி!: காப்பாற்ற முயன்ற 11 ஊழியர்கள் காயம்
-
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெறக்கூடாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
-
2 இட்லி ரூ.40, அசைவ சாப்பாடு ரூ.350: கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம்
-
உள்ளூர் வாகனங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு