குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நிலப்பிரச்னையில் மனு கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆண்டிப்பட்டி தாலுகா, ஆசாரிபட்டி மகேஸ்வரி 35, தாய் முனியம்மாள், மகன்கள்,


அக்கா மகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்து உடலில் தண்ணீர் ஊற்றினர். ஆசாரிபட்டி தெற்குதெரு மகேஸ்வரி. அதேபகுதியில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது.அங்கு வீடு கட்டுவதற்கு மகேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக வங்கியில் கடன் வாங்கினார். ஆனால் நிலத்தில் வீடு கட்ட கூடாது என அக்கம்பக்கத்தில் வசிக்கும் 10 பேர் இடையூறு செய்ததாக பலமுறை போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றோம் என்றார்.

Advertisement