தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு

தேனி: தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமை நடிகர் ரவிமோகன் திறந்து வைத்து விற்பனையை துவங்கி வைத்தார்.

மலபார்கோல்டு நகைகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விற்பனையை துவங்கி வைத்தார். மலபார்டு கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழக தலைவர் யாசர், தமிழக கிழக்கு மண்டல தலைவர் சுதிர்அகமது, வடக்கு மண்டல தலைவர் அமீர்பாபு, மேற்கு மண்டல தலைவர் நெளசாத், தேனி கிளை துணை தலைவர் நந்தலால், மேலாண்மை உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் ரசிகர்களுடன் ரவிமோகன் செல்பி எடுத்தார். நீண்ட நாளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்நிறுவனம் மேலும் பல கிளைகள் திறக்க வாழ்த்துக்கள்' என்றார்.

இந்நிறுவனம் உலக அளவில் 14 நாடுகளில் 425 இடங்களில் ஷோரூம்களுடன் செயல்படுகிறது. இந்த கிளை தமிழகத்தின் 35வது ஷோரூம் ஆகும். ஜொலிக்கும் 'ஏரா' வைர நகைகள், மதிப்பு மிக்க கற்களால் தயாரிக்கப்பட்ட பிரீசியா நகைகள், கைவினைக்கலைஞர்களால் செய்யப்பட்ட எத்தினிக் நகை டிசைன்கள், குழந்தைகளுக்கான ஸ்டார்லெட் நகை தொகுப்பு ஷோரூமில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

திறப்பு விழா சலுகையாக மார்ச் 26 வரை தங்கம் வாங்குபவர்களுக்கு வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement