குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
மைகோ லே - அவுட்: குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாவணகெரேயை சேர்ந்தவர் நாகராஜ், 50. இவரது மனைவி ரங்கம்மா, 47. இவர்கள் இருவரும் மகன் தர்ஷன், 22 உடன், கடந்த நான்கு ஆண்டுகளாக, பெங்களூரு மைகோ லே - அவுட் பிலேகல்லஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்தனர்.
தனியார் நிறுவனத்தில் நாகராஜ் காவலாளியாகவும், ரங்கம்மா வீட்டு வேலையும் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த நாகராஜ், மனைவியிடம் தகராறு செய்தார்.
வீட்டின் சமையல் அறைக்குள் சென்ற அவர், கத்தியை எடுத்து வந்து, மனைவியின் கழுத்தை அறுத்தார். ரத்தவெள்ளத்தில் ரங்கம்மா சம்பவ இடத்திலேயே இறந்தார். நாகராஜ் அங்கிருந்து தப்பினார். வெளியே சென்றிருந்த தர்ஷன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, தாய் கொலையானது தெரிந்தது.
இதுகுறித்து தென்கிழக்கு மண்டல டி.சி.பி., முகமது சுஜிதா நேற்று கூறுகையில், ''நாகராஜ், ரங்கம்மாவுக்கு திருமணம் முடிந்து, 25 ஆண்டுகளாகிறது. அடிக்கடி அவர்களுக்குள் குடும்ப தகராறு நடந்து உள்ளது.
நேற்று முன்தினம் நடந்த சண்டையில் மனைவி கழுத்தை அறுத்து கணவர் கொன்று உள்ளார். முதற்கட்ட விசாரணையில் காய்கறி நறுக்க பயன்படுத்தப்படும் கத்தியால் கழுத்தை அறுத்தது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை அறுத்த ஆயுதம் பற்றி தெரியவரும். தலைமறைவாக உள்ள நாகராஜை போலீசார் தேடுகின்றனர்,'' என்றார்.
மேலும்
-
பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி முறிவு? புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சிக்கல்
-
ஆப்கன் மருத்துவமனை மீது பாக் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு
-
ஒடிஷா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி!: காப்பாற்ற முயன்ற 11 ஊழியர்கள் காயம்
-
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெறக்கூடாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
-
2 இட்லி ரூ.40, அசைவ சாப்பாடு ரூ.350: கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம்
-
உள்ளூர் வாகனங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு