2 இட்லி ரூ.40, அசைவ சாப்பாடு ரூ.350: கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம்
கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் வரம்பு நிர்ணயித்து, விலை மற்றும் கட்டண பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலை பின்பற்றினால் ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்வது அம்பலமாகுமே என்று கட்சிகள் பதற்றம் அடைந்துள்ளன.
டீ, காபி, இட்லி விலையில் ஆரம்பித்து மேடை அமைப்பது, பந்தல் போடுவது, போஸ்டர் அச்சடிப்பது, பிட் நோட்டீஸ் வினியோகிப்பது, சேர் வாடகை, மைக் செட், டாக்சி, வேன், டிரைவர் சம்பளம், மண்டபத்தில் தங்க வைப்பது, தோரணம் கட்டுவது உள்ளிட்ட ஒவ்வொரு செலவுக்கும் வரம்பு நிர்ணயித்துள்ளது.
''நாற்காலி வாடகை ரூ.10, வி.ஐ.பி. சேர் வாடகை ரூ.280 என்பது ஜாஸ்தி. மொத்தமாக உணவு ஆர்டர் செய்து தொண்டர்களுக்கு கொடுக்கும்போது செலவு குறைவாக இருக்கும்.
ஆணையம் பட்டியலில் எல்லாமே அதிகமாக இருக்கிறது. இது நடைமுறைக்கு பொருந்தாது'' என்று திமுக நிர்வாகி அன்புசெழியன் கூறினார். ஆணையத்திடம் முறையிட போவதாக தெரிவித்தார்.
வாசகர் கருத்து (17)
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17 மார்,2026 - 14:39 Report Abuse
தேர்தல் பரப்புரைகளில் அசைவத்தை முற்றிலும் தடை செய்தால் என்ன? 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
17 மார்,2026 - 11:41 Report Abuse
எலக்க்ஷன் கமிஷன் என்ன ரேட் வேணுனாலும் fix பண்ணட்டும். கமிஷன் கண்ணுல மண்ணைத்தூவி செலவுபண்ண எங்களுக்குத்தெரியும். 0
0
Reply
அப்பாவி - ,
17 மார்,2026 - 11:27 Report Abuse
படத்தைப் பாத்தா நாலு யானைகளை கட்டி தீனி போடற செலவாகும் போலிருக்கே.. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
17 மார்,2026 - 11:17 Report Abuse
ஒரு கவுன்சிலரே 4 கோடி செலவு செய்து 400 கோடி எடுக்கிறான். என்னங்க 40 லஷமா? ஒரே தமாஷா இருக்கு.
இதனால்தான் அவனவன் அரசியல் சாசன புத்தகத்தை வைத்து கொண்டு அலைகிறானா? ஜனநாயக காமெடி. 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
17 மார்,2026 - 10:06 Report Abuse
விடியலார் ஏற்கனவே அறிவித்து விட்டார் "மறுபடியும் ஆட்சியில் ஏறும் வரை ஊண் உறக்கம் கூடாது என்று" எனவே திமுக உபி-கள் கவலைப்பட தேவையில்லை.. 0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
17 மார்,2026 - 09:44 Report Abuse
கிராமங்களில் 5 ரூபாய்க்கு இட்லி கிடைக்கிறது. மதுரை கே.புதூரில் ஒரு கடையில் அதே 5 ரூபாய்க்கு தரமான இல்லியே கிடைக்கிறது. கடைக்குள் உட்கார்ந்து சாப்பிடலாம். 0
0
SANKAR - ,
17 மார்,2026 - 10:51Report Abuse
Bro elections are not conducted in villages only.The price mentioned by EC is some sort of average as different prices for each constituency is not possible 0
0
Reply
சண்முகம் - ,
17 மார்,2026 - 09:24 Report Abuse
இந்த விலையில் உணவு கிடைக்கிறதா? 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
17 மார்,2026 - 09:09 Report Abuse
இந்தியா வேடிக்கையான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது ........ அம்பேத்கருக்கு நன்றி ....... 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
17 மார்,2026 - 09:04 Report Abuse
என்னங்க இப்புடி காது குத்துறிங்க 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
17 மார்,2026 - 08:30 Report Abuse
எப்படியும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்போகிறாரார்கள். இதிலெனன படடியல் எல்லாமே கண்துடைப்பு. மக்கள் ஏமாளிகள் 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement