இடம் விற்பதாக ரூ.97 லட்சம் மோசடி
சிவகங்கை: மானாமதுரை அருகே இடம் விற்பதாக கூறி ரூ.97 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் குறித்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
மானாமதுரை கீழமேல்குடி திருமுருகன் 43. இவரும், நண்பர் நல்லபாண்டியும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். புதிதாக பிளாட் போடுவதற்காக இடத்தை திருமுருகன் தேடியுள்ளார். அப்போது மதுரை பி.டி.ஆர்., நகர் பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமாக மானாமதுரை அருகே நாச்சியோடையில் 8.93 ஏக்கர் நிலம் இருப்பதை அறிந்தார். அவரிடம் நிலத்தை வாங்க திருமுருகன், நல்லபாண்டி முயற்சித்தனர். மொத்த இடத்தையும் ரூ.1.02 கோடிக்கு விற்க பாலசுப்பிரமணியன் ஒத்துக்கொண்டார்.
இதற்காக 2025 மார்ச் 11 ல் ஒப்பந்தம் செய்தனர். திருமுருகன், பாலசுப்பிரமணியனின் வங்கி கணக்கிற்கு பல்வேறு தேதிகளில் ரூ.97,87,000 செலுத்தினார்.இதன்பின்
பத்திரம் பதிந்து தராமல் இழுத்தடித்த பாலசுப்பிரமணியன், பணத்தை திரும்பி தராமல் மோசடியில் ஈடுபட்டார்.
திருமுருகன் புகாரின்பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை