நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராம நவமி விழா
சென்னை: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீராம நவமி விழாவை முன்னிட்டு, யாக சாலை பூஜையுடன், லட்சார்ச்சனை வரும் 20ம் தேதி துவங்குகிறது.
நங்கநல்லுாரி ல், 32 அடி உயர அதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பா ட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஸ்ரீராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
ஸ்ரீராம ரக் ஷை, பூ ர்ண வடமாலை தரிசனத்திற்கு சிறப்பு பெற் ற இத்தலத்தில், ஸ்ரீராம நவமி விழாவை முன்னிட்டு, கோதண்டராம சுவாமிக்கு, வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு யாகசாலை பூஜையும், லட்சார்ச்சனையும் ஆரம்பமாகி றது.
வரும் 28ம் தேதி வரை நடத்தப்படும் லட்சார்ச்சனை, தினமும் காலை, மாலை நடக்கிறது. 29ம் தேதி லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது. கோதண்டராமருக்கு சந்தன காப்பு அலங்காரம், 21ம் தேதி காலை 8:00 மணிக்கு நடக்கிறது.
அதை தொடர்ந்து, லட்சார்ச்சனையும் நடக்கிறது. 22ம் தேதி காலை 10:00 மணிக்கு, சீதா - ராம திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. ஸ்ரீராம நவமி தினமான, 27ம் தேதி காலை, ஐந்தாம் கால யாக சாலை பூர்த்தியாகி, சிறப்பு திருமஞ்சனம் துவங்குகிறது.
தொடர்ந்து, மகா பூர்ணாஹுதி, கிரஹபிரீத்தி நடக்கிறது. பின், யாத்ரா தானம், கடப்புறப்பாடு, கலசாபிஷேகம் நடக்கிறது.
அன்று காலை 10:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரம் நடக்கிறது. வரும் 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் புறப்பாடு நடக்கிறது.
மேலும்
-
ஈரான் போரில் அமெரிக்க வீரர்கள் பலி 13 ஆக அதிகரிப்பு; 200 பேர் காயம்
-
சுப்ரீம் கோர்ட்டில் 3,500 பொதுநல வழக்குகள் நிலுவை; மத்திய அரசு தகவல்
-
ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் ஆலோசனை
-
தரமற்று அவசரகதியில் சாலை சீரமைப்பு; பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
-
'ஏஐ' தொழில்நுட்ப விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
-
11 இடங்களில் சோதனைச்சாவடி தர்மபுரி மாவட்டத்தில் அமைப்பு