வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.9 லட்சம் இழப்பீடு

சென்னை: மாங்காடு பகுதியில் 'சைபர்சிட்டி பில்டர்ஸ் மற்றும் டெவலப்பர்ஸ்' நிறுவனம் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில் வில்லா வகை வீடு வாங்க, ரஜனி என்பவர், 2020ல் முன்பதிவு செய்தார்; முழு தொகையான 99 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

இதற்கான ஒப்பந்தத்தின் படி, 2021 ஜூனில் வீட்டை ஒப்படைக்கவில்லை.

அதன்பின், 2023 பிப்ரவரியில் பணிகள் முழுமையாக முடியாத நிலையில், வீட்டை அந்நிறுவனம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் ரஜனி புகார் அளித்தார்.

இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:

ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாளில் மனுதாரருக்கு, கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்காமல் தாமதம் செய்தது உறுதியாகிறது. எனவே, மனுதாரருக்கு, 6.90 லட்சம் ரூபாய் வாடகை இழப்பீடாகவும், பதிவு கட்டண உயர்வுக்காக, 1 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கான இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய் உட்பட மொத்தம், 9.60 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement