தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு
மானாமதுரை: மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த மார்ச் 13ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்தவுடன் நேற்று காலை பூர்ணாகுதி முடிந்து புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் காலை 9:00 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக வலம் வந்த பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பூஜைக்கு பின் அர்ச்சகர்கள் காலை 9:40 மணிக்கு புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
மேலும்
-
ஈரான் போரில் அமெரிக்க வீரர்கள் பலி 13 ஆக அதிகரிப்பு; 200 பேர் காயம்
-
சுப்ரீம் கோர்ட்டில் 3,500 பொதுநல வழக்குகள் நிலுவை; மத்திய அரசு தகவல்
-
ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் ஆலோசனை
-
தரமற்று அவசரகதியில் சாலை சீரமைப்பு; பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
-
'ஏஐ' தொழில்நுட்ப விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
-
11 இடங்களில் சோதனைச்சாவடி தர்மபுரி மாவட்டத்தில் அமைப்பு