வாலிபர் உயிரிழப்பிற்கு போதை ஊசி காரணமா?

புளியந்தோப்பு: போதை ஊசி செலுத்தியதில் வாலிபர் இறந்தாரா என, புளியந்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ரிஸ்வான், 38. தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, புளியந்தோப்பு, திருவேங்கடம் சுவாமி சாலையில், மருத்துவமனை பின்புறம் மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த மருத்துவமனை செவிலியர்கள், அவரை '108' ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், ரிஸ்வான் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

ரிஸ்வான் மயங்கி கிடந்த இடத்தில் இரண்டு ஊசிகள், மருந்து காலி டப்பா உள்ளிட்டவை கிடந்துள்ளன. அவற்றை பறிமுதல் செய்த புளியந்தோப்பு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரிஸ்வான் இணை நோயால் பாதித்து, அதற்காக இரண்டு ஆண்டுகளாக மருந்து எடுத்து வந்தது தெரியவந்தது.

ரிஸ்வானை வீட்டில் இருந்து அழைத்து சென்றவரை போலீசார் தேடுகின்றனர். போதை ஊசி செலுத்தி இறந்தாரா அல்லது நோய் பாதிப்பால் இறந்தாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement