தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் தண்ணீர் பந்தல் அமைக்காத கட்சிகள்
ராசிபுரம்: ராசிபுரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளால், அரசியல் கட்சி-யினர் தண்ணீர் பந்தல் அமைக்க ஆர்வம் காட்டாததால் பொது-மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிவிட்டாலே கோடை வெயில் வாட்டி எடுத்துவிடும். இதனால், சாலையில் செல்பவர் கள், பஸ்சில் செல்லும் பயணிகள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படு வர். பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயில் தொடங்கும்போது, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைப்பர். இந்த தண்ணீர் பந்தல்களில் கட்சி தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் படங்களை போட்டு பெரிய பேனர்கள் வைப்பதையும், அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதையும் அரசியல் கட்சியினர் வழக்கமாக கொண்டி-ருந்தனர்.இந்நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்-ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் விதிமுறைகளின்படி, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் படங்களை பேனர்களில் போட முடியாது. விளம்பரம் செய்ய வழி இல்லை என்பதால், இந்தாண்டு எந்த ஒரு அரசியல் கட்சியும் தண்ணீர் பந்தலை திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
நேற்று, ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகரின் முக்கிய பகுதி-களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு இடத்தில் கூட தண்ணீர் பந்தல் அமைக்கப்-படவில்லை. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும்
-
நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
-
கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் வண்ண ஓவியம்
-
குதிரையேற்ற சாகச போட்டி பெண் அதிகாரிகள் அசத்தல்
-
அழகிய ஆர்கிட் மலர்கள்: வியக்கும் சுற்றுலா பயணிகள்
-
தமிழக எல்லையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு
-
குன்னுாரில் 19 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை