கோவில் பட்டாவில் குளறுபடி பத்து ரூபாய் இயக்கம் மனு

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று பத்து ரூபாய் இயக்கத்தினர், 50க்கு மேற்பட்டோர் பிளக்ஸ் பேனரில் கோரிக்-கையும், மனுவும் எழுதி வந்தனர். தேர்தல் விதிமுறை நடைமு-றையால் போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால், அவர்கள் கொண்டுவந்த மனுவை பெட்டியில் போட்டு சென்றனர்.


அந்த மனுவில்:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, தோக்கவாடி கிராமத்தில் ராம பெருமாள் மற்றும் நல்லைய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நிலத்திற்குரிய பட்டாவில் தனி நபர்களின் பெயர்களை பட்டாவில் சட்டவிரோதமாக சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை நீக்குமாறு பலமுறை மனு அளித்தும் நடவ-டிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள், ஹிந்து சமய அற-நிலையத்துறை அதிகாரிகளை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்தனர்.

Advertisement