தேர்தல் விதிமுறைகளால் ஆடு விற்பனை மந்தம்

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனி யன், பவித்திரம், செவ்வந்திப்பட்டியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, முசிறி, தொட்டியம், துறையூர், சேந்தமங்கலம் உள்-ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், ஆடுகளை வாங்க வருகின்றனர்.


கொல்லிமலை அடிவாரப்பகுதி சந்தைகளில் விற்பனை செய்யும் ஆட்டு இறைச்சிக்கு தனி சுவை உள்ளதால், வியாபா-ரிகள் ஒரு வாரத்திற்கு ‍தேவையான மொத்த ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.தற்போது, சட்டசபை தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்-ததால், பறக்கும் படையினரின் சோதனைக்கு பயந்து வியாபா-ரிகள் ‍குறைந்த பணத்தை கொண்டு வந்து ஆடுகளை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், இரண்டு சந்தைகளிலும், 9 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானது.
இதுகுறித்து, ஆட்டு வியாபாரி பழனி கூறுகையில், ''மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனை செய்கின்றனர். இந்த சோதனையின் போது பணம் சிக்கினால், அந்த பணத்திற்கு வியா-பாரிகளான நாங்கள் எங்கே சென்று ஆவணங்களை தயாரிக்க முடியும். இதனால், 10 ஆடு வாங்கும் இடத்தில், நான்கு ஆடுகள் மட்டுமே வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement