சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து
காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், தேர்தல் விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்க துவங்கியுள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக, வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டம் மட்டுமல்லாமல், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், பொது வினியோக குறைதீர் கூட்டம் உள்ளிட்ட குறைகேட்பு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்க, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில், தங்களின் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் நேற்று பலரும் ஆர்வத்தோடு மனுக்களை போட்டு சென்றனர். கலெக்டர் அலுவலகம் மட்டுமல்லாமல், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா ஆகிய அலுவலகங்களிலும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
-
கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் வண்ண ஓவியம்
-
குதிரையேற்ற சாகச போட்டி பெண் அதிகாரிகள் அசத்தல்
-
அழகிய ஆர்கிட் மலர்கள்: வியக்கும் சுற்றுலா பயணிகள்
-
தமிழக எல்லையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு
-
குன்னுாரில் 19 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை