கால்கள் செயல் இழந்த நிலையில் பயணிகளை பாதுகாத்த டிரைவர்
திருமங்கலம்: ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென கால்கள் செயலிழந்த நிலையிலும், பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தி பயணிகளை பாதுகாத்த டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்.
ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை டிரைவர் சரவணன் 50, ஓட்டி வந்தார். பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர். திருமங்கலம் ஆலம்பட்டி தனியார் பள்ளி அருகே வந்தபோது டிரைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரது இடது கால் திடீரென செயல் இழந்தது.
சுதாரித்த டிரைவர் சரவணன் பஸ்சை மெதுவாக இயக்கி ரோட்டின் ஓரத்தில் நிறுத்திய நிலையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த கண்டக்டர் ரமேஷ் மற்றும் பயணிகள் சரவணனை பத்திரமாக பஸ்சில் இருந்து இறக்கி முதலுதவி சிகிச்சை அளித்தனர். அந்த வழியாக வந்த காரில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதும், சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காத்த டிரைவரை பயணிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
மேலும்
-
நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
-
கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் வண்ண ஓவியம்
-
குதிரையேற்ற சாகச போட்டி பெண் அதிகாரிகள் அசத்தல்
-
அழகிய ஆர்கிட் மலர்கள்: வியக்கும் சுற்றுலா பயணிகள்
-
தமிழக எல்லையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு
-
குன்னுாரில் 19 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை