பா.ம.க.,வில் போட்டி; கவலைப்பட வேண்டாம் திலகபாமா கருத்து

திண்டுக்கல்: எதிரும், புதிருமாக ராமதாஸ், அன்புமணி உள்ள நிலையில் தேர்தலில் பா.ம.க., வேட்பாளருக்கு போட்டியாக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு மாநில பொருளாளர் திலகபாமா பதிலளித்தார்.

திண்டுக்கல்லில் பா.ம.க., பொருளாளர் திலகபாமா கூறியதாவது: தமிழகத்தில் மது, ஊழல், பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மக்கள் விரோத அரசை துாக்கி வெளியேற்றுவதற்கு வாக்காளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

அதை எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி தலைமையிலான தே.ஜ.,கூட்டணி நிறைவேற்றி வைக்கும். உச்சநீதிமன்றத்தில் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வழக்கு போட்டிருப்பது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. உறுதிப்படுத்தப்பட்ட சின்னம், தலைவராக அன்புமணி உள்ளார். எல்லாம் சரியாக அமையும். போதையால் சீரழிந்துவிட்ட சமுதாயமாக தமிழகம் மாறிவிட்டது.

அதற்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும். பா.ம.க.,வில் எந்த தொய்வும் இல்லை. அனைத்து நிர்வாகிகளும் அன்புமணியில் தலைமையில் களப்பணியாற்றி வருகின்றனர்.

அ. தி.மு.க., தே.ஜ.,கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை ராமதாஸ் நிறுத்துவார் என நினைக்க வேண்டியதில்லை. அங்கிருப்பவர்கள் அவர் மீதான பாசத்தில் விட்டுக்கொடுக்க முடியாமல் நிற்கிறார்களே தவிர பா.ம.க., தலைவர் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை., என்றார்.

Advertisement