டீ தர மறுத்ததால் மருமகள் கொலை: கேரளாவில் மாமியார் கொடூரம்
மலப்புரம்:கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் அருகேயுள்ளது கொட்டம்பரா. இப்பகுதியை சேர்ந்த சுனில் பாபுவின் மனைவி ரஜிலா, 28. நேற்று காலை சுனில் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த அவரது தாய் சாந்தா, தன் மருமகள் ரஜிலாவிடம் டீ தருமாறு கேட்டுள்ளார்.
பலமுறை கேட்டும் டீ தராததால் ஆத்திரமடைந்த சாந்தா திடீரென பேரக்குழந்தைகள் கண் எதிரே ரஜிலாவை கத்தியால் குத்தினார்.
பேரக்குழந்தைகள் தடுத்தும் ஆத்திரம் அடங்காத சாந்தா மருமகளை சரமாரியாக குத்தினார். இதில் ரஜிலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் கத்தி குத்தில் படுகாயம் அடைந்த ரஜிலாவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஜிலா உயிரிழந்தார்.
போலீசார், சாந்தா மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் தண்ணீர் பந்தல் அமைக்காத கட்சிகள்
-
ஆத்துார் வாலிபர் கொலை: நண்பர் உட்பட இருவர் சரண்
-
கோவில் பட்டாவில் குளறுபடி பத்து ரூபாய் இயக்கம் மனு
-
கால்கள் செயல் இழந்த நிலையில் பயணிகளை பாதுகாத்த டிரைவர்
-
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து
-
தேர்தல் விதிமுறைகளால் ஆடு விற்பனை மந்தம்
Advertisement
Advertisement