கும்பமேளா புகழ் மோனாலிசாவின் திருமணம் 'லவ் ஜிஹாத்' சம்பவம்: இயக்குநர் சனோஜ் மிஷ்ரா
கார்கோனே: 'உத்தர பிரதேசத்தில் நடந்த மஹா கும்பமேளா வாயிலாக புகழ்பெற்ற மோனாலிசா, ஒரு முஸ்லிம் நபரை திருமணம் செய்து கொண்டது, 'லவ் ஜிஹாத்' சம்பவம்' என, அவரை திரைப்படத் துறையில் அறிமுகம் செய்த இயக்குநர் சனோஜ் மிஷ்ரா குற்றஞ்சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேசத்தி ன் மகேஷ்வர் நகரைச் சேர்ந்தவரும், நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்தவருமான மோனாலிசா போன்ஸ்லே, 2025ல் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா வாயிலாக பிரபலமடைந்தார்
வசீகரிக்கும் கண்கள் மற்றும் அழகான புன்னகையுடன், ருத்திராட்சம் உள்ளிட்ட பொருட்களை விற்று வந்த அவரை, சமூக வலைதளங்கள் உலகப் புகழ் அடைய செய்தன. இதையடுத்து, பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளரும், இயக்குநருமான சனோஜ் மிஷ்ரா, தி டைரி ஆப் மணிப்பூர் படத்தில் நடிக்க மோனாலிசாவை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, நாகம்மா என்ற மலையாள படத்திலும் மோனாலிசாவுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற அவர், அங்கு தன் காதலரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பர்மான் கான் என்பவரை, கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த திருமணத்துக்குப் பின், படப்பிடிப்பு நடக்கும் கேரளாவில் தன் கணவருடன் அவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த திருமணம் குறித்து அவரை திரைப்படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் சனோஜ் மிஷ்ரா நேற்று கூறியதாவது:
'லவ் ஜிஹாத்' எனப்படும், ஹிந்து பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, திருமணம் செய்து கொண்டு அவர்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோனாலிசாவின் திருமணம் நடந்துள்ளது.
சமூக வலைதளம் வாயிலாக ஒன்றரை ஆண்டுகளாக பழகிய நபர், அவசர அவசரமாக அவரை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணை வலையில் வீழ்த்துவதற்காகவே திட்டமிட்ட சதி அரங்கேறியுள்ளது.
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் நோக்கில் ஹிந்து பெண்களை குறிவைத்து ஏமாற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு சில அமைப்புகள் நிதியுதவி அளித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, மோனாலிசாவின் திருமணம் நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில், அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ம.பி., முதல்வர் மோகன் யாதவை சந்திக்க இருக்கிறேன். ஹிந்து பெண் ஒருவர் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்த அவரிடம் வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது லவ் ஜிஹாதா இல்லை உண்மை காதல் என்பதை சில காலத்திற்க்கு பிறகு ப்ரிடஜை பார்த்தால் தெரியும் அதுவரை உண்மை காதல் என்றே நம்புவோம் 2. அந்த பெண் மதம் மாற்ற ப்பட்டால் பிறகு தெரியும் மணமகனின உண்மை நடவடிக்கை என்ன என்று.
இரண்டு வருடம் பொறுத்திருப்போம்.. எல்லாம் வெளிச்சத்திற்கு வரும். இவள் அப்போது என்ன சொல்கிறாள் என்று பார்போம்.
//இதுபோன்ற கருத்துகள் அபத்தமானவை// உன் வீட்டுப் பெண்ணுக்கு இப்படி ஒரு லவ்ஜிகாத் நடந்திருந்தால் அப்போது தெரியும் உனக்கு வலி! யார் கண்டது போலிப் பெயரில் இருக்கும் நீயே அமைதிமார்க்க ஆளாகக்கூட இருக்கலாம். அதுதான் லவ் ஜிஹாத்துக்கு வக்காலத்து வாங்குகிறாய்.
இந்துக்கள் இஸ்லாம், கிறித்துவ மத மாற்றம் செய்ய அரசு மத மாற்ற தடை சட்டம் மூலம் நாடு முழுவதும் தடுத்தால் தான் உண்டு. அல்லது சில நூற்றாண்டில் நாடு கிறித்துவ அல்லது இஸ்லாம் நாடாக மாறிவிடும். ஓட்டு முறை சர்வதேச அச்சுறுத்தல் போன்றவற்றை எந்த கட்சியும் எதிர் கொள்ள முடியாது. நம் அரசியல் சாசன குறைபாட்டை திருத்தம் செய்ய முடியவில்லை. புண்ணிய பூமி. அசுரருடன் தினமும் போராடி வாழ்க்கை.
Are you watched Kerala Story Part -1 and Kerala Story Part -II movies. You kind of awareness person can understand
அந்த டைரக்டர் இவளுக்கு பக்கத்திலேயே இருந்து விளக்கு பிடித்திருப்பான் போல இருக்கு
இந்தியாவில் ஒரு முஸ்லீம் பெண் ஒரு இந்துவை மணந்தால் அவள் தன் குடும்பத்திடம் இருந்து வாரிசு உரிமையை இழக்கிறாள். சில சமயம் அந்த தீவிரவாத ஜிஹாதிகளால் தன்னுடைய உயிரையே இழக்கிறாள்.
ஒரு இந்துப் பெண் லவ் ஜிஹாத் என்ற பெயரில் ஒரு முஸ்லீமை மணந்தும் முஸ்லீம்
மதத்துக்கு மாறாவிட்டால், அவள் தன்னுடைய முஸ்லீம் கணவனிடமிருந்து வாரிசு உரிமையை இழக்கிறாள். ஆனால் ஒரு இந்து பெண் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து முஸ்லீம் மதத்திற்கு மாறினாலும், அவளது இந்து குடும்பத்திடமிருந்து சமமான வாரிசு உரிமையை கட்டாயம் பெறுகிறாள். இது எப்படி இருக்கு? இப்படித்தான்
பல ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் இந்துக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதை அவர்களுக்கு விபரமாக எடுத்துச் சொல்லி புரியவைப்பதற்குத்தான் இங்கு யாருமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் அனைவரும் மதச்சார்பற்ற மூதேவிகளாகவே இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்.
இது போன்ற கருத்துக்கள் அபத்தமானவை ஜாதியவாதிகள் நாடக காதல் என்கிறார்கள். மதவாதிகள் லவ் ஜிகாத் என்கிறார்கள். பெண்களை உயிருள்ள அறிவுள்ள ஜீவனாக மதிக்கும் யாரும் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூற மாட்டார்கள்.
Watch Kerala Story Part 1 and Kerala Story Part -II.
Love is above religions? Yes as long as boy is a Muslim and girl is a Hindu. When Hindu girl leaves her religion for love, it is celebrated as victory of love But as soon as the case involves a Hindu boy in love with a Muslim girl, boy is chopped into .... (hundreds of cases in India). If boy is influential, he is asked to convert to Islam. So love is above religion of non Muslims only. Islam always remains above love.
ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை ஏமாற்ற ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள்மேலும்
-
ஈரான் போரில் அமெரிக்க வீரர்கள் பலி 13 ஆக அதிகரிப்பு; 200 பேர் காயம்
-
சுப்ரீம் கோர்ட்டில் 3,500 பொதுநல வழக்குகள் நிலுவை; மத்திய அரசு தகவல்
-
ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் ஆலோசனை
-
தரமற்று அவசரகதியில் சாலை சீரமைப்பு; பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
-
'ஏஐ' தொழில்நுட்ப விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
-
11 இடங்களில் சோதனைச்சாவடி தர்மபுரி மாவட்டத்தில் அமைப்பு