கூரியர் அலுவலகத்தில் புகையிலை பார்சல் பறிமுதல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகர் பகுதி கூரியர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பார்சலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வைகை நகர் பகுதியில் கூரியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை 5:45 மணிக்கு எமனேஸ்வரம் போலீசார் பார்சல்களை சோதனை செய்தனர். அப்போது ஒரு பார்சலை எஸ்.ஐ., சண்முகவேல் திறந்து பார்த்தார்.

அதில் 225 கிராம் கொண்ட 53 தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் தலா 300 கிராம் கொண்ட 46 போதை பாக்கு பாக்கெட்டுகள் என 25 கிலோ 725 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அதில் உள்ள முகவரி அடிப்படையில் அனுப்பியவர், எங்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement