குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு பணி துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில், பல நுாற்றண்டுக்கு முன், மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக நடுகல், முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், எலும்பு துண்டுகள், புதைவிடம் உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் தென்பட்டன.
'அந்த இடத்தில் அகழாய்வு மேற்கொண்டு, தொல்லியல் எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்' என, அப்பகுதி மக்கள், இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தினர்.
தற்போது, தொல்லியல் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் - பொறுப்பு அறவாழி தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், குமரிக்கல்பாளையத்தில், தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
குமரிக்கல்பாளையம் அகழாய்வு வாயிலாக, சங்க காலத்துக்கு முந்தைய காலத்தில், அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை
Advertisement
Advertisement