செங்கோட்டை குண்டுவெடிப்பு: இருவருக்கு 15 நாள் காவல்
புதுடில்லி டில்லி செங்கோட்டை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இருவரை, நேற்று, 15 நாட்கள் காவலில் நீதிமன்றம் அனுப்பியது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி, டில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக, இதுவரை, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக, ஜமீர் அஹமது அகங்கார் மற்றும் துபைல் அஹமது பட் ஆகிய, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இருவரை, கடந்த பிப்ரவரியில் என்.ஐ.ஏ., போலீசார் கைது செய்தனர்.
அந்த மாதம், 25ம் தேதி, அவர்கள் இருவரும், 10 நாட்கள் என்.ஐ.ஏ., போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர். அவர்களின் காவல், மார்ச் 6 வரை நீட்டிக்கப்பட்டது.
நான்கு நாட்களுக்கு பின், அவர்கள் இருவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. மார்ச் 11ம் தேதி, அவர்களின் நீதிமன்ற காவல், மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
நேற்று அவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும், மேலும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, டில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை