குன்னுாரில் 19 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை
குன்னுார்: குன்னூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மண்டல அலுவலர்கள் மற்றும் குழுவினருக்கான தேர்தல் பணி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
கூடுதல் கலெக்டர் சங்கீதா தலைமை வகித்து பேசுகையில்,''குன்னுார் சட்டசபை தொகுதியில் மொத்தம், 244 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 19 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை. ஓட்டுச் சாவடியில் இருந்து, 200 மீ., சுற்றளவுக்குள், அரசியல் கட்சி அலுவலகங்கள், சின்னங்கள் இருக்க கூடாது. இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கூடுதல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் துணை தாசில்தார்கள் ஜெபசிங், உமா ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தாசில்தார் செந்தில்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement