கட்டெறும்புகளின் குட்டிக்கரணம்!
-நமது நிருபர்-
தமிழக காங்கிரஸ் கட்சியின் பலம் பற்றி பிரபல அரசியல் தலைவர் சொன்ன அந்த வாசகம், மிகவும் பிரசித்தம். 'தமிழகத்தில் இருக்கும் அத்தனை காங்கிரஸ்காரர்களையும் ஒரே வேனில் ஏற்றிச்சென்று விடலாம். அப்போதும் கொஞ்சம் காலியிடம் இருக்கும்' என்பது அந்த முதிர்ந்த தலைவரின் கருத்து.
'ஆளே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு எதற்கு இத்தனை இடங்கள்' என்று கேட்டு, கூட்டணிக்கு தலைமை வகித்த திமுகவிடம் அவர் வாதிட்டதும் உண்டு. அத்தகைய பலம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு, முந்தைய தேர்தலை காட்டிலும் 3 தொகுதிகளை சேர்த்துக் கொடுத்து, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது திமுக. அதையே காரணம் காட்டி, கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கூடுதல் தொகுதி கேட்கத் தொடங்கி விட்டனர்; மூன்று முறை பேசியும் முடிவு எதுவும் ஏற்படவில்லை.
'கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, 'கடந்த முறை பெற்ற தொகுதி எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முடியாது' என்றும் திட்டவட்டமாக கூறி இருக்கிறது. இரு தரப்பிலுமே, 'சிக்கல் எதுவும் இல்லை' என்ற சப்பைக்கட்டுகளுக்கு மட்டும் குறைவில்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம், காங்கிரஸ் கட்சியினர் தான் என்று புலம்பித் தீர்க்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
தவெகவுடன் கூட்டணி என்று தினமும் பேசிப்பேசியே தங்கள் தலைமையை அச்சுறுத்தி, கூடுதல் தொகுதி வாங்கி விட்டதாக, திமுக தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி இருக்கிறது. ஆனாலும், ஏதோ வெளியில் சொல்ல முடியாத காரணங்களால் காங்கிரஸ் கட்சியை சகித்துக் கொள்ளும் திமுக தலைமை, கம்யூனிஸ்ட்களை தொகுதிகளை குறைக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்மையான பலத்தை மக்கள் நலக்கூட்டணி காலத்திலேயே திமுக உணர்ந்து தெளிந்து விட்டது. 'போக்கிடம் இல்லாதவர்கள்' என்பதால், அவர்களை வேண்டா வெறுப்பாக நடத்தி அலைக்கழிக்கிறது. வேறு வழியில்லாமல் அவர்களும் அறிவாலயத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர். காரணம், கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பது, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கச்சிதமாகப் பொருந்துவது தான்.
கட்டெறும்பாக மாறியது மட்டுமின்றி, குட்டிக்கரணமும் அடித்தால் தான் சீட் வாங்க முடியும் என்ற நிலையில் இருக்கின்றனர், கம்யூனிஸ்ட் கட்சியினர். இப்படி மானம் இழந்து, மரியாதை இழந்தாலும், அறிவாலய வாசலில் நின்றபடி, 'பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை' என்று அவர்கள் பேட்டி கொடுப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளை சகித்துக்கொண்டுதான் ஆகா வேண்டும். தற்போது தொண்டர்களே இல்லாத தேமுதிகவை வேறு சேர்த்துக்கொண்டுள்ளனர். இல்லை என்றால் மீண்டும் வனவாசம் போக வேண்டியதுதான். அதிமுக + பாஜக மிகவும் சுலபமாக ஆட்சியை பிடித்துவிடும்.
UNDI KULUKKI KURUMA KUMBALUKKU VERU POKKIDAM KIDAYAADHU.ENNA KONJAM KOODUDHAL SWEET BOX VAANGA INDHA DRAMA.ADHU KIDAITHAAL EVVALAVU SEATTU PICHSI POTTALUM VAANGI KONDU MUTTU KODUPPARGAL.
சீனா கம்யூனிஸ்ட் நாடா..... நல்லவேளை சொன்னீங்க
உண்டியல் குலுக்கிகள் எங்கும் போக முடியாது. திமுகவிடம் மண்டி போட்டுத்தான் ஆகவேண்டும் .
கொடுப்பதை வாங்கிட்டு போயிடுங்க...கம்யூனிஸ்டுக்கும் திருமாக்கும் வேற வழியும் இல்ல...ஐந்து வருடம் செம முட்டு கொடுத்திட்டு இப்பபோயி மாற்றி பேச முடியாது.தேமுதிக விசயம் வேற...
தீய முக விடம் கடரும்பு டான்ஸ் ஆடுனா புடிக்காது அவங்க மாநாடு போடும்போது கவர்ச்சி டான்ஸ் ஆடுவாங்களே அதுபோல ஆடுங்க ஒருவேளை பலிக்கலாம்.... அண்ணன்.. ரும்மா விற்கு ஒரு பிளாஸ்டிக் சேர் கான்போர்ம்
once Indian communists were known for their simplicity. but not tamilnadu communists. now they are selling the blood and sweat of ordinary employees
ஸ்டாலினுக்கு செல்லா பெரும்தொகையைத்தான் பிடிக்கும் காங்கிரெஸ்ஸை அல்ல என அரசியல் விமர்சகர்கள் பேசிக்கொள்கிறார்களாம்.
CPI கட்சிக்கு சென்னையில் 7 மாடி கொண்ட பிரம்மாண்ட ஆபீஸ் இருக்கிறது. கார்ப்பரேட் அலுவலகங்கள் எல்லாம் தோற்றுப் போகும் படி கட்டி வைத்திருக்கிறார்கள். ஒரு மாடிக்கு ஒருவர் என்று கணக்கு போட்டால் கூட ஏழு மாடிக்கு ஏழு எம்எல்ஏ இருக்க வேண்டும். எல்லாம் வெறும் காலிப் பெருங்காய டப்பா
இன்றைய கம்யூனிஸ்டுகள் எல்லோரும் கார்ப்பரேட் கம்யூனிஸ்டுகள். வசதி வாய்ப்பு உள்ளவர்கள். என்றைக்கு கட்சியை அடகுவைத்து 25 கோடி ரூபாய் பேரம் பேசி வாங்கி அதனை பெரிய கட்டிடங்களாக கட்டி அத்தனையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு பிழைக்க துணிந்தார்களோ அன்றே கம்யூனிஸ்டுகளின் முகமூடி கிழிந்து தொங்கிவிட்டது. ஜனசக்தி நாளிதழில் திமுகவின் ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக எழுதியதால் அன்றைக்கு எம் ஜி யார் பதவிக்கு வர உதவினார்கள். ஊழல்வாதி கருணாநிதியை கம்யூனிஸ்டுகளை விட யாருமே அதிகம் விமர்சித்ததே இல்லை என்கிற நிலை இன்று விலகி அவர்கள் ஊழலுக்கு துணை போக ஆரம்பித்ததில் விளைவுதான் இந்த அவமானம். இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இந்த கம்யூனிஸ்டுகளுக்குமேலும்
-
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
-
மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்
-
ரூ.1.60 லட்சம் பறிமுதல்
-
சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன
-
தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
-
'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '