இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கராபுரம்: ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சங்கராபுரம் டி.எம்., பள்ளியில் நடந்தது.

ரோட்டரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் சுரேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். சார்பு நீதிபதி தனசேகரன் துவக்கி வைத்தார்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆதியான் பங்கேற்றனர். வழக்கறிஞர் தாமரைச்செல்வன் குடும்பத்தினர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

கோவை சங்கரா கண் மருத்துவமைய டாக்டர்கள், 240 பேருக்கு கண் பரிசோதனை செய்து, 120 பேர் அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement