லாரி மோதி மூதாட்டி பலி
விருத்தாசலம்: கரும்பு ஏற்றி சென்ற லாரி மோதி, மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த நேமம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மனைவி காசியம்மாள், 85; இவர் நேற்று மாலை 5:00 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி செல்லும் சாலையில், கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியாக கரும்பு ஏற்றி வந்த லாரி, காசியம்மாள் மீது பலமாக மோதியது. இதில், அவர் படுகாயமடைந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் முருகன்குடி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சீமான், 55; மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
கரூர் பகுதியில் பிரசாரம் செய்ய 9 இடங்களை அறிவித்த போலீசார்
-
'ஊடக சான்றளிப்பு அனுமதியுடன் விளம்பரம் வெளியிட வேண்டும்'
-
பழைய பஸ் ஸ்டாண்டில் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலம்
-
மனைவி மாயம்; கணவர் புகார் போலீசார் விசாரணை
-
சாலைபுதுாரில் ரூ.48.91 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய், எள் வர்த்தகம்
-
மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் ரூ.7.41 லட்சம் ரொக்கம் பறிமுதல்