சாலைபுதுாரில் ரூ.48.91 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய், எள் வர்த்தகம்

கரூர்:சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 48 லட்சத்து, 91 ஆயிரத்து, 612 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

கரூர் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள, சாலைபுதுார் ஒழுங்-குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 21,808 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்த-பட்சமாக, 40.15 ரூபாய், அதிகபட்சமாக, 51.90 ரூபாய், சராசரி-யாக, 49.89 ரூபாய்க்கு ஏலம் போனது.


மொத்தம், 7,196 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 3 லட்சத்து, 49 ஆயிரத்து, 12 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 146 ரூபாய், அதிகபட்சமாக, 161.12 ரூபாய், சராசரியாக 158.69 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக 124.66, அதிகபட்சமாக, 150.12, சராசரி-யாக, 145.16 ரூபாய்க்கு ஏலம் போனது. 22,814 கிலோ எடை-யுள்ள கொப்பரை தேங்காய், 34 லட்சத்து, 18 ஆயிரத்து, 838 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

கருப்பு எள், ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 138, அதிகபட்ச-மாக, 166 ரூபாய், சராசரியாக, 157 ரூபாய், சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 120, அதிகபட்சமாக, 132, சராசரியாக, 125 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,609 கிலோ எடை-யுள்ள எள், 11 லட்சத்து, 23 ஆயிரத்து, 762 ரூபாய்க்கு விற்பனை-யானது.
மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 48 லட்சத்து, 91 ஆயிரத்து, 612 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

Advertisement