கர்ப்பிணிக்கு ரோட்டில் பிரசவம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தனியாக பரிசோதனைக்கு நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் ரோட்டோரத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண்.

நிறைமாத கர்ப்பிணியான இவர் உதவிக்கு யாரும் உடன் வராத நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு தன்னந்தனியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ்சில் வந்துள்ளார்.

பஸ் ஸ்டாப்பில் இருந்து மருத்துவமனைக்கு நடந்து சென்றார். அப்போது பிரசவ வலி அதிகரித்துள்ளது. வலியால் துடித்தவர் ரோட்டோரம் அமர்ந்தார். அருகில் இருந்த பெண்கள் உதவி செய்ய அவருக்கு அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது.

சைல்ட் கேர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாய்க்கும் குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் தாயும் சேயும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement