பொரி வியாபாரி வீட்டில் தீ விபத்து ரூ.7 லட்சம் சாம்பல்

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் பஞ்.,க்குட்பட்ட காந்திபுரம் மெயின் ரோட்டில், கிருஷ்ணன் கோவில் எதிரே வசிப்பவர் சித்தேஷ்வரன், 30; பொரி வியாபாரி.


இவருடைய மனைவி பிரியா, 25. கூலி தொழி-லாளி. தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று காலை, குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். தம்பதியர் வீட்டை பூட்டி-விட்டு, வேலை நிமித்தமாக நாமக்கல் சென்றிருந்தனர். காலை, 11:00 மணிக்கு சித்தேஷ்வரன் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.


இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சித்தேஷ்வர-னுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, சுவிட்ச் பாக்ஸில் மின் கசிவு ஏற்பட்டு தீ பரவியது தெரியவந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.


இருப்பினும், பீரோவில் இருந்த ரொக்கம், ஏழு லட்சம் ரூபாய், இரண்டு மூட்டை அரிசி, துணிமணிகள், வீட்டின் மேற்கூரை உள்பட அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகின. இதைக்கண்டு சித்தேஷ்வரன் மற்றும் பிரியா கதறி அழுதனர். இதுகுறித்து, சேந்-தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement