வேகத்தடையில் தவறி விழுந்து காய்கறி வியாபாரி பலி
மல்லசமுத்திரம்:வேகத்தடையில் தவறி விழுந்து காய்கறி வியாபாரி பலியானார்.
சேலம்
மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, நைனாம்பட்-டியை சேர்ந்தவர்
பழனிச்சாமி மகன் சண்முகசுந்தரம், 45; காய்கறி வியாபாரி.
இவர்,
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மல்ல-சமுத்திரத்தில் இருந்து
ஆட்டையாம்பட்டிக்கு, 'ஹீரோ ஹோண்டா' டூவீலரில் சென்றார். அப்போது,
மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள
வேகத்த-டையில் அதிவேகமாக ஏறி இறங்கியபோது, தடுமாறி கீழே
விழுந்தார்.
தலைக்கவசம் அணியாததால், தலையில் பலத்த அடிபட்டு,
சம்-பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு மஞ்சு, 37, என்ற மனைவியும், 21
வயதில் ஒருமகளும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். விபத்து குறித்து,
மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு; 4 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
லாரி மோதி ஒருவர் பலி
-
தாய், குழந்தை சடலம் மீட்பு
Advertisement
Advertisement