இன்றைய நிகழ்ச்சி
ஆன்மிகம் ராமநவமி மகோற்சவம் ராமர் கோவில், ராம்நகர். விஸ்வரூபம், திருவாராதனம், கொடியேற்றுதல், திருமஞ்சனம், காலை 5.30 முதல் 9.30 மணி வரை. யாகசாலை பிரவேசம், மகா கும்பஸ்தாபனம், மாலை 3.30 மணி. சிம்ம வாகனம் புறப்பாடு, இரவு 7 மணி.
திருவிழா * அய்யப்பசாமி பொற்கோவில், சித்தாபுதுார். அய்யப்பனுக்கு களபாபிஷேகம், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அதிகாலை முதல். உற்சவ சடங்குகள் இரவு, 7.30 மணி. பக்தி கானக்கச்சேரி, இரவு 8 மணிக்குமேல்.
* முனியப்பசாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. மஞ்சள் நீராடல், சுவாமி திருவீதி உலா, காலை 9 மணி. அன்னதானம், மதியம் 1 மணி. கொடி இறக்கம், தீபாராதனை, இரவு 10 மணி. கருப்பராயன் பூஜை, இரவு 12 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.