தொழிற்சாலையில் உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால் அபராதம்

சேலம்: தொழிற்சாலை, கட்டுமான பணியிடங்களில், உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் கலைமதி அறிக்கை:


சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 10க்கும் மேற்பட்ட தொழி-லாளர் பணிபுரியும் தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்-களில் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களை பாது-காக்க, அதுதொடர்பான புகார்களை விசாரித்து தீர்வு காண, 'உள்-ளக குழு' அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதனால் வேலை அளிப்பவர்கள் உடனே, 'உள்ளக புகார் குழு' அமைத்து அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குழு, அதில் இடம்பெற்ற உறுப்பினர் விபரங்களை, www.tnswdposhicc.tn.gov.in மற்றும் https://shebox.wcd.gov.in என்ற இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும். உள்ளக குழு அமைக்காவிட்டால், 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்-படும்.

Advertisement