மின்மாற்றியில் ஏறிய மேலாளர் பலி
இடைப்பாடி: சங்ககிரி, அரசிராமணி பிட் -- 2 கிராமம், கீழ்கரட்டுப்பா-ளையம், கோம்பைக்காட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் சிவசங்கர், 31. சங்ககிரியில் உள்ள தனியார் லாரி அலுவலகத்தில் மேலாள-ராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஆழ்-துளை குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முயன்றார்.அப்போது மின்சாரம் இல்லை என எண்ணிய அவர், காலை, 9:00 மணிக்கு அவரது
வீட்டுக்கு மின்சாரம் வரும் டிரான்ஸ்பார்மில் ஏறி மின்சாரம் உள்-ளதா என பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்து தொங்கியுள்ளார். தேவூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement