தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பென்னாகரம்:தர்மபுரி
மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இராமகொண்டஅள்ளி
அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பில், 2 பேர் தேசிய ஊரக திறனாய்வு
தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகம்
முழுவதும் கடந்த ஜன.,10ல், தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வு
நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் பிப்., 19ம் தேதி
வெளியிடப்பட்டது.
மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தரவரிசையில் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில்
இராம கொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவன்
ஸ்ரீசரவணன், மாணவி ஞானஸ்ரீ ஆகியோர் உதவித்தொகை பெற தகுதி
பெற்றுள்ளனர். அவர்களுக்கு, 9 முதல், 12ம் வகுப்பு வரை மாதந்தோறும்
ஆயிரம் என, மொத்த-மாக, 48 ஆயிரம் ரூபாய் அரசின் சார்பில் உதவித்தொகை
வழங்-கப்படும்.
உதவித்தொகை பெற தகுதி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை
ஆசிரியர் ரவிச்சந்திரன், நல்லாசிரியர் சுப்பிர-மணி மற்றும்
ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி மேலாண்மை குழு-வினர், பெற்றோர் ஆசிரியர்
கழகத்தினர் பொதுமக்கள் பாராட்-டினர்.
மேலும்
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
லாரி மோதி ஒருவர் பலி
-
தாய், குழந்தை சடலம் மீட்பு
-
கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்