வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மாணவி உடல் தகனம்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, 10ம் தேதி மாயமானார். மறுநாள் அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். குளத்துார் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரித்து, மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ரவுடி, தர்ம முனீஸ்வரனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் நேற்று காலை, மாணவியின் உடலை குடும்பத்தினர் பெற்று, இறுதி சடங்கு நடத்தி தகனம் செய்தனர். இதில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement