தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணம் தான் முக்கியம்: நயினார் நாகேந்திரன்
சென்னை: பாஜவிற்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு, ''எண்ணிக்கை முக்கியம் கிடையாது. எண்ணம் தான் முக்கியம்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இன்னும் முதல்வர் ஸ்டாலின் மொழியை பற்றி பேசி கொண்டே இருக்க கூடாது. தமிழக மக்களுக்கு என்ன நன்மை வேண்டுமோ, அதை தான் முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும். தமிழகத்தில் மலையாளம், தெலுங்கு உட்பட எல்லா மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள். வட இந்தியாவை சேர்ந்த நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள். தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்கள் 25 சதவீதம் பேர் இருக்கின்றனர்.
அந்த மொழியை சார்ந்தவர்களின் ஓட்டு எல்லாம் முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறாரா? ஹிந்துக்களின் ஓட்டு வேண்டாம் என்று சொல்கிறார்களா? நாளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகிறார். நாளை தொகுதி பங்கீடு பேச்சு நடத்த இருக்கிறோம்.
கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை எங்கு நடக்கிறது என்பதை நாளைக்கு வாங்க பார்க்கலாம். உலகத்துக்கே டில்லி தான் முடிவு எடுக்கிறது. அப்பறம் என்ன. டில்லி எடுக்கும் முடிவு நல்ல முடிவாக தானே இருக்கும். தேஜ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
மேலும் சாத்தூர் தொகுதியில் நீங்க போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என கேட்கப்பட்டதற்கு, இன்னும் அதெல்லாம் முடிவாகவில்லை என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார். பாஜவிற்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு, ''எண்ணிக்கை முக்கியம் கிடையாது. எண்ணம் தான் முக்கியம்'' என கூறிவிட்டு நயினார் நாகேந்திரன் காரில் புறப்பட்டு சென்றார்.
உண்மை. அண்ணாமலை அவர்கள் நன்கு படித்தவர், பண்பாளர், எத்தனை கேள்வி கேட்டாலும், எத்தனை முறை கேட்டாலும், எப்படி மாற்றி கேட்டாலும், அதற்கு தகுந்தாற்போல் சாமர்த்தியமாக தன் கட்சிக்கு பெருமை சேர்ப்பது போல் பதில் சொல்ல அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தான். சந்தேகமே இல்லை. எண்ணமும் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல், எண்ணிக்கையும் உயர்வாகவே அமையும்.
மகப்பேறு இறப்பு என்பது வட மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அங்கு பிரசவிக்கும் 1 லட்சம் தாய்மார்களில், 140 என இறப்பு விகிதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த இறப்பு விகிதம் 35-40 என இருக்கிறது. எனவேதான், உத்தரப் பிரதேசத்தின் மாநில உருமாற்ற ஆணையத்தின் STC தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான உயர்மட்ட குழு சென்னைக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சி..... தொடரட்டும் எல்லோருக்கும் உதவி செய்ய இந்த தமிழகம் எப்பொழுதும் இருப்பிடம்..
அண்ணாமலையை ஓரம் கட்டியது எவ்வளவு பெரிய தவறு என்பதை தேர்தல் முடிவுகள் பிஜேபி தலைமைக்கு உணர்த்தும்.
எவ்வளவு பிச்சை போட்டாலும் வாங்கிக் கொள்வோம் என்று வெளிப்படையாக வெளியே சொல்ல வெட்கமாக இருப்பதால் இப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியுள்ளது!
இதுபோன்ற வார்த்தைகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் அவர்கள் பேசுவது களப்பணியாற்றும் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும்.
பிஜேபி வாங்குவது 50 தொகுதி என்ராலும் வெற்றி என்னவோ ZERO அனால் VCK கம்யூனிஸ்ட் எல்லாம் 6 வாங்கினால் 6 வெற்றி இது தான் முக்கியம் , வெற்றி விகிதாச்சாரம் முக்கியம் அன்னே
முதலில் நைனார் டெபாசிட் வாங்குறரா னு பாப்போம் ...
தேர்தலில் போட்டியிடுகிறாரா??
திராவிட ரத்த பந்தம் இப்படி பேச வைத்துள்ளது அண்ணாமலையிடம் இதுபோன்ற பதில் கண்டிப்பாக வராது.
IPPADIPATTA EPS SOMBU AVARGALAI BJP STATE LEADER AAKIYADHU AMIT SHAH AVARGALIN KODUMAYAANA THAVARU.SINGA THALAIVAN ANNAMALAI ENGE SUNDELI NAINAR ENGE.ASINGAM.IVAR BJP KATCHIKKU PAAL OOTHI PUDHAIKKAMAL OOYA MAATAAR.SEEKIRAM IVARAI MAATRINAAL NALLADHU.மேலும்
-
'கிரிப்டோ கரன்சி' முதலீடு: ரூ.30 கோடி சுருட்டிய மோசடி நிறுவனம் மீது வழக்கு
-
கடையில் திருட முயன்ற வாலிபர் கைது
-
காதலியுடன் தங்கி இருந்தவர் தற்கொலை
-
சதித்திட்டம் தீட்டியதாக 4 பேரை பிடித்து விசாரணை
-
சிறுவாபுரி கோவிலுக்கு செல்லும் சாலை 4 வழியாக விரிவாக்க நடவடிக்கை
-
4 விரைவு ரயில்களின் சேவையில் இன்று மாற்றம்