சதித்திட்டம் தீட்டியதாக 4 பேரை பிடித்து விசாரணை

திருநின்றவூர்: சதித்திட்டம் தீட்டியதாக வாலிபர்கள் 4 பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார்; 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஜாமினில் வந்த அருள் என்பவரை சிலர் நோட்டமிடுவதாக தெரிய வந்தது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமார், 36, ரவி, 40, லோகேஷ், 30, மணிகண்டன், 38, ஆகியோரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement