4 விரைவு ரயில்களின் சேவையில் இன்று மாற்றம்

சென்னை: 'சென்னை சென்ட்ரல் - கோவை உட்பட, நான்கு விரைவு ரயில்களின் இயக்கத்தில், இன்று தாமதம் ஏற்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணி இன்று நடக்கிறது. இதனால், இந்த தடத்தில் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 சென்னை சென்ட்ரல் - கோவை, இரவு 10:30 மணி ரயில், இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்

 சென்ட்ரல் - கர்நாடகா கே.எஸ்.ஆர்., பெங்களூரு, இரவு 10:50 மணி விரைவு ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்

 சென்ட்ரல் - ஈரோடு, இரவு 11:00 மணி ஏற்காடு விரைவு ரயில், 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்

 சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூர், இரவு 11:30 மணி ரயில், ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement