நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா கோலாகல துவக்கம்

நங்கநல்லுார்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், யாக சாலை பூஜை, லட்சார்ச்சனையுடன், ஸ்ரீ ராம நவமி விழா நேற்று துவங்கியது.

நங்கநல்லுாரில் அமைந்துள்ளது, 32 அடி உயர அதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ராமநவமி விழா துவங்கியது.

வரும், 28ம் தேதி வரை தினமும் காலை, மாலை லட்சார்ச்சனை நடந்து, 29ம் தேதி பூர்த்தியாகிறது.

கோதண்டராமருக்கு சந்தன காப்பு அலங்காரம், 21ம் தேதி காலை 8:00 மணிக்கு நடக்கிறது. அடுத்த நாள் காலை 10:00 மணிக்கு சீதா ராம திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.

ராம நவமி தினமான வரும், 27ம் தேதி காலை ஐந்தாம் கால யாக சாலை பூர்த்தியாகி, சிறப்பு திருமஞ்சனம் துவங்குகிறது.

அன்று காலை 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடக்கிறது. வரும், 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் புறப்பாடு நடக்க உள்ளது.

***

Advertisement