10 கிலோ கஞ்சா பறிமுதல்

உத்தமபாளையம்: உத்தமபளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி தமிழ்செல்வன் மகன் அருண் 29. நேற்று காலை இவரது வீட்டில் ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

வீட்டில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ராயப்பன்பட்டி போலீசார் அருணை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement