பேருந்து நிழற்குடையில் தண்ணீர் பந்தல் அமைப்பு
காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று பயணியர் நிழற்குடை அருகில் தண்ணீர் பந்தல் அமைத்து, பயணியருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், பயணியர் நிழற்குடை உள்ளது. இவ்வழியாக, தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் - காஞ்சிபுரம் செல்லும் பயணியர் அதிகம் வந்து செல்கின்றனர். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், பயணியர் வெயிலில் காத்திருக்கின்றனர். அவர்களது தாகம் தீர்க்க தேவரியம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதான சாலை ஓரம் இருக்கும் ஊராட்சிகள் இதை கடைப்பிடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement