தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
ரியாத்: ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்ததுடன், அந்நாட்டு தூதரக ஊழியர்கள் 5 பேர் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது.
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் எச்சரித்து இருந்தார். ஆனால் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை தொடர்ந்து வந்தது. இந்த சூழலில், ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
ராணுவத் தூதர் உட்பட ஈரான் தூதரக ஊழியர்கள் 5 பேரை விரும்பத்தகாத நபர்கள் (persona non grata) என சவுதி அரேபியா அறிவித்தது. நாட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு 24 மணி நேரம் அவகாசத்தை சவுதி அரேபியா அரசு விதித்துள்ளதால், அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானம் ஆகியவற்றின் அப்பட்டமான மீறலாகும்.
இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் எதிரானவை. தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க சவுதி அரேபியா அரசு அனைத்து முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.
தாக்குதல்கள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும். ஈரானின் நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தி, தற்போதும், எதிர்காலத்திலும் தூதரக உறவுகளைச் சேதப்படுத்தக்கூடும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
வாசகர் கருத்து (4)
mohan - chennai,இந்தியா
22 மார்,2026 - 21:32 Report Abuse
வெரி குட் ... அதே மாதிரி, ஒரு மேற்கு நாட்டின் ஆட்களையும் வெளியேற்றலாம்.. எல்லா பிரச்னையும் முடிந்து விடும்.. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
22 மார்,2026 - 13:52 Report Abuse
சன்னி, ஷியா போர் மிக தீவிரம் அடைகிறது. பாக்கிஸ்தான் சவூதி ஒப்பந்தப்படி பாகிஸ்தானை போரில் சேர சவூதி நிர்ப்பந்தம் செய்கிறது. இதனால் பாகிஸ்தானில் 5 கோடி ஷியாக்கள் போராட்டம் வெடித்து 100 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து உள்ளனர்.
அப்படி பாக்கிஸ்தான் ஈரானை தாக்கினால் பாகிஸ்தானின் பல பகுதிகளை ஈரான் தாக்கி அழிக்கும் வாய்ப்பு உள்ளது. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
22 மார்,2026 - 11:27 Report Abuse
ஷியா ஈரானியர்கள் முஸ்லிம்களல்ல. ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறும் தைரியமுண்டா? அவர்கள்தான் (உங்கள் கருத்துப்படி). இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றுவதில்லையே. 0
0
visu - tamilnadu,இந்தியா
22 மார்,2026 - 12:02Report Abuse
ரொம்ப முக்கியம் 0
0
Reply
மேலும்
-
போலீஸ் செய்திகள் விபத்தில் விவசாயி பலி
-
தேர்தல் பயிற்சி வகுப்பில் 'ஆப்சென்ட்' :ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் :ஏப்.1, 4, 6ம் தேதிகளில் விசாரணை
-
ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்: காங்., வேட்பாளர் கந்தசாமி வாக்குறுதி
-
ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா
-
கோவிந்தசாலையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு ஓட்டு சேகரிப்பு
-
தி.மு.க., வேட்பாளர்களுக்கு வரவேற்பு
Advertisement
Advertisement