குளத்தின் கரையை பலப்படுத்த கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: நடுவக்கரையில் விவசாயத்திற்கு அரணாக விளங்கும் குளத்தை துர்வாரி, சேதமான கரைகளை பலப்படுத்தி, கால்நடைகள் செல்லதவாறு பாதுகாப்புச் சுவர் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கழுக்குன்றம் அருகே நடுவக்கரை ஊராட்சியில் கருமாரப்பாக்கம், குன்னவாக்கம், நடுவக்கரை காலனி, ஊர் என பல பகுதி களில் 1,000துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகும். குறைந்தது இரண்டு ஏக்கரில் இருந்து 10 மற்றும் ஏக்கர் வரை பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குன்னவாக்கத்திற்கும், நடுவக்கரை பகுதிக்கும் இடையில் உள்ள குளத்தின் நீர் மழைகாலத்தில் நிரம்பி, கலங்கல் வழியாக அங்குள்ள ஏரிக்கு செல்கிறது. ஏரியின் நீரை மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிள்ளையார் கோவில் தெரு, தண்டுமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் இருக்கும் குளத்தின் கரைகள் சேதமடைந்துள்ளன.

பஜனைகோவில் தெரு மற்ற பகுதிகளில் உள்ள குளத்தின் கரைகள் பலமிழந்துள்ளது. இதனால், குளம் நிரம்பும் போது கலங்கல் வழியாக ஏரிக்குச் சென்றாலும், நீரின் உந்து சக்தியால், தண்ணீர் தெருக்களுக்குள் சென்று வீணாகிறது.

எனவே, குளத்தின் கரைகளை ஆய்வு செய்து, குளத்தை துார்வாரி, புதிதாக கரைகள் அமைத்து நீரதாரமாக உள்ள பகுதியாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement