பிரதான குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு
உடுமலை: உடுமலை அருகே, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு சீரமைக்கப்படாமல் இருப்பதால், பல கிராமங்களுக்கு வினியோகம் துண்டிக்கப்பட்டு, மக்கள் பாதித்து வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பொட்டையம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து, மேற்குப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அங்கிருந்து கொங்கல்நகரம் செல்லும் வழித்தடத்தில், பிரதான குழாய் பல இடங்களில் உடைந்து, குடிநீர் குளம் தேங்கி வீணாகி வருகிறது.
பல வாரங்களாக இந்த உடைப்புகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளி உள்ளிட்ட பல கிராமங்களில், குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நீராதாரமான போர்வெல்களில் இருந்து பெறப்படும் உவர்ப்பு நீரை, குடிநீராக பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நீரை குடிப்பதால், பல்வேறு பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
கோடை காலம் துவங்கியுள்ளதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால், பல கிராம மக்கள் பாதித்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் தரப்பில், குழாய் சீரமைப்புக்கு தொழிலாளர்கள் ஒதுக்கீடு செய்தும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர். குடிநீர் வினியோகம் சீராகாவிட்டால், விரைவில் காலி குடங்களுடன் மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மேலும்
-
2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல்
-
ஆக்கிரமிப்பில் நிழற்குடை பொதுமக்கள் கேள்வி
-
100 சதவீத ஓட்டுப்பதிவே இலக்கு வாக்காளருக்கு விழிப்புணர்வு
-
குவாரிகளில் ஆளுங்கட்சியினர் லஞ்சம்: தேர்தல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு
-
முறையான தண்ணீர் திறப்பு விவசாயிகள் முறையீடு
-
படம் 3சி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் குறைகளை சுட்டிக்காட்டிய கட்சியினர்