விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.151க்கு விற்பனை
உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ.151க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் அரசு விடுமுறை என்பதால், நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு, 27 விவசாயிகள், 236 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.148.59 முதல், ரூ.151 வரையும், இரண்டாம் தரம், ரூ.131 முதல், ரூ.139 வரையும், இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது.
இத்திட்டத்தில், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முகசுந்தரம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தனர்.
மேலும்
-
2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல்
-
ஆக்கிரமிப்பில் நிழற்குடை பொதுமக்கள் கேள்வி
-
100 சதவீத ஓட்டுப்பதிவே இலக்கு வாக்காளருக்கு விழிப்புணர்வு
-
குவாரிகளில் ஆளுங்கட்சியினர் லஞ்சம்: தேர்தல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு
-
முறையான தண்ணீர் திறப்பு விவசாயிகள் முறையீடு
-
படம் 3சி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் குறைகளை சுட்டிக்காட்டிய கட்சியினர்